கோவிலுக்கான அடிக்கல் நடுதல் கொங்கோ நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது


கோவிலுக்கான அடிக்கல் நடுதல் கொங்கோ நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது


8 அக்டோபர் 2021


கின்ஷாசா, காங்கோ ஜனநாயக குடியரசு, 18 அக்டோபர் 2020, (BWNS) – காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டி.ஆர்.சி) தேசிய பஹாய் வழிபாட்டு இல்லத்தின் கட்டுமானம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. கோவில் நிலத்தில் அடிக்கல் நாட்டு சடங்கும் நடைபெற்று, அது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. கோயில் மற்றும் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு. கின்ஷாசாவின் புறநகரில் அமைந்துள்ள இந்த இடம் அரசாங்க அதிகாரிகள், மத சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாரம்பரிய தலைவர்களை விருந்தினராக கொண்டிருந்தது. அதே நேரத்தில், இந்த முக்கியமான மைல்கல்லைக் குறிக்க எண்ணற்ற மக்கள் பிரார்த்தனையில் இணைந்ததால், அப்பரந்த நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.

பணித்திட்டத்தின் ஒரு புதிய கட்டத்தை குறிக்கும் ஒரு விழா அதிகாரிகள், சமயத்தலைவர்கள், பாராம்பரிய தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

தேசிய ஆன்மீக சபை, இந்த நிகழ்விற்காக எழுதப்பட்ட ஒரு கடிதத்தில், வழிபாட்டு இல்லம் பஹாய் வழிபாடு மற்றும் சேவை குறித்த கருத்தின் அத்தியாவசிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது என்று கூறுகிறது, “இவை இரண்டும் உலகின் மீளுருவாக்கத்திற்கு மிகவும் முக்கியம். அதில் பஹாவுல்லா உருவாக்கிய மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றான கோவிலின் மேன்மை, ஆற்றல், வழிபாட்டு இல்லத்தின் தனித்துவமான நிலை ஆகியவை உள்ளன. … இன்று நடைபெற்ற விழாவுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு, ஒரு விதை மண்ணில் விதைக்கப்படுவதுடன் ஒப்பிடலாம்–அது வளர்ந்து, விரைவில் மிகவும் மதிப்புமிக்க பழங்களை உற்பத்தி செய்யும் என்ற நம்பிக்கை.”

தற்போதைய சுகாதார வழிகாட்டிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒரு நேர்த்தியான கூட்டத்தை நடத்த அனுமதித்தன

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தருணத்தின் வருகையும் அது பிரதிநிதிப்பதும் நாடு முழுவதும் சமூகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.ஆர்.சியின் பரந்த நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அந்த இடத்திலிருந்து உடல் ரீதியாக தொலைவில் இருந்தாலும், அந்த இடத்திலிருந்து ஏற்கனவே வெளிப்படும் ஒற்றுமை உணர்வு அவர்களின் சமூகத்திற்கு அதிக தீவிரத்துடன் சேவை செய்வதற்கான அவர்களின் முயற்சிகளைத் தூண்டுகிறது என தெற்கு கிவுவின் மண்டல பஹாய் கவுன்சிலின் செயலாளர் பஷில்வாங்கோ ம்பலீகோ விளக்குகிறார். “முன்னேற்றத்தின் ஒவ்வொரு அடியும் தெற்கு கிவு மற்றும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் எழுச்சியை, சமூக மாற்றத்திற்கான பல தசாப்த கால முயற்சிகளின் விளைவாக நாங்கள் பார்க்கிறோம். “

டி.ஆர்.சியின் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் லாவோசியே முட்டொம்போ ட்ஷியோங்கோ கூறுகையில், இந்த நிகழ்வில் மாறுபட்ட நபர்கள் இருப்பது ஒரு வழிபாட்டு இல்லத்தின் ஒன்றிணைக்கும் பங்கைக் குறிக்கிறது. “இது ஒரு பஹாய் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தங்கள் படைப்பாளருக்கு பிரார்த்தனை செய்வதற்கான ஒரு வழிபாட்டு இல்லம். இந்தக் கோயில் ஒற்றுமையின் உருவகமாக இருக்கும் மற்றும் கொங்கோ சமுதாயத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை பிரதிபலிக்கிறது. அவரது எழுத்துகள் ஒன்றில், ‘அப்துல்-பஹா இதுபோன்ற வழிபாட்டுத் தலங்களை உருவாக்குவது ‘மக்கள் ஒன்றுகூடுவதையும், ஒருவருக்கொருவர் இணக்கமாகி, பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஏதுவாக்குகின்றது; இதன் விளைவாக, இந்த ஒன்றுகூடலினால், ஒற்றுமையும் பாசமும் மனித இதயத்தில் வளர்ந்து செழிக்கும்,’” எனக் கூறுகிறார்.

நிகழ்வில் மாறுபட்ட நபர்கள் இருப்பது ஒரு வழிபாட்டு இல்லத்தின் ஒன்றிணைக்கும் பங்கைக் குறிப்பதாக டி.ஆர்.சியின் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் லாவோசியே முட்டொம்போ ட்ஷியோங்கோ கூறுகிறார்.

சமூக வாழ்வின் வடிவங்களில் பிரார்த்தனையின் மகத்தான தாக்கம் வழிபாட்டு இல்லத்தைப் பற்றி பிரதிபலிக்க வெள்ளிக்கிழமை கூடியிருந்த மேற்கு கசாய் மண்டலத்தில் உள்ள பாரம்பரிய தலைவர்களால் விவாதிக்கப்பட்டது, அவர்கள் னர். ம்பெம்பே கிராமத்தின் தலைமை போப் ங்கோகாடி கூறுகிறார், “பஹாய் வழிபாட்டுக் கூட்டங்களில் பல்வேறு மக்கள் ஈடுபடுவதை நாங்கள் காண்கிறோம்; நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக நடக்கிறோம். பிரார்த்தனை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, கிராமம் மாற்றம் கண்டுள்ளது. நானும் மாறியுள்ளேன்.

“எப்போதும் மோதலில் இருந்தவர்கள், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாதவர்கள் இப்போது ஒற்றுமையாக இருக்கிறார்கள். கடவுளுடைய திருவாக்கின் சக்தி மகத்தானது. இதுதான் மோதலில் ஈடுபட்டவர்களை ஒன்றிணைத்துள்ளது. “இந்த உள்ளூரின் தலைவராக இருந்தபோதும் நான் எப்போதும் மற்ற அதிகாரிகளுடன் ஒன்றிணைந்திருக்கவில்லை, ஆனால் வழிபாட்டுக் கூட்டங்கள் மூலம் நாங்கள் ஒற்றுமையாகிவிட்டோம். இதுதான் ஒரு சமூகமாக வாழ எங்களை அனுமதித்துள்ளது. இதைத்தான் வழிபாட்டு இல்லம் குறிக்கிறது. ”

சமூக வாழ்வின் வடிவங்களில் பிரார்த்தனையின் மகத்தான தாக்கம் வழிபாட்டு இல்லத்தைப் பற்றி பிரதிபலிக்க வெள்ளிக்கிழமை கூடியிருந்த மேற்கு கசாய் மண்டலத்தில் உள்ள பாரம்பரிய தலைவர்களால் விவாதிக்கப்பட்டது

பாப் பெருமானார் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் பஹாய் புனித தினத்துடன் இந்த அற்புதமான விழா இணைவாகியுள்ளது. தற்போதைய சுகாதார வழிகாட்டிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒரு நேர்த்தியான கூட்டத்தை நடத்த அனுமதிக்கின்றன. ஒரு நேரடி ஸ்ட்ரீம் மூலம் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டு தேசிய தொலைக்காட்சி செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட இந்த விழா, புதிய கட்டிடம் எழும் இடத்திலேயே ஒரு குறியீடான முதல் கல்நாட்டின் மூலம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

தேசிய வழிபாட்டு இல்லத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் 2012’இல் அறிவிக்கப்பட்டன. அப்போதிருந்து டி.ஆர்.சியின் பஹாய்கள் கட்டடக் கலைஞர்களையும் இந்த தனித்துவமான கட்டமைப்பிற்குப் பொருத்தமான தளத்தையும் அடையாளம் கண்டு வந்துள்ளனர்.

வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்பு பாரம்பரிய கலைப்படைப்புகள், கட்டமைப்புகள் மற்றும் டி.ஆர்.சியின் இயற்கை அம்சங்களால் உத்வேகம் பெற்றுள்ளது.

ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ள, உலகெங்கிலும் கட்டுமானத்தில் உள்ள பல பஹாய் கோயில்களில் ஒன்றான இந்த வழிபாட்டு இல்லம், வழிபாடு மற்றும் சேவையின் ஒருங்கிணைந்த பங்குகளைப் பிரதிபலிக்கிறது. கின்ஷாசாவில் உள்ள வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்பு பாரம்பரிய கலைப்படைப்புகள், கட்டமைப்புகள் மற்றும் டி.ஆர்.சியின் இயற்கை அம்சங்களால் உத்வேகம் பெற்றுள்ளது. காங்கோ நதியின் உருவகம், அதன் துணை நதிகள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு பெரிய நீரோட்டமாக சேகரிக்கும் மழைநீர், உலகம் ஒன்றுபடுவதையும் ஐக்கியமாவதையும் குறிக்கிறது,  பல்வேறு காங்கோ மக்களின் கலைப்படைப்பை நினைவூட்டும் குவிமாடத்தின் வெளிப்புறத்தை அலங்கரிக்கும் வடிவங்கள் மூலம் இது வெளிப்படுத்தப்படுகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1460/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: