மாஸ்டர் அப்துல் பஹாவின் உருவத்தை வரைதல்
மாஸ்டர் அப்துல் பஹா ஐக்கிய அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கு முன்னமே, திருமதி கிப்பன்ஸ் எனும் பெயர் கொண்ட ஒரு பெண்மணி, அவரது உருவத்தை வரைப்படமாகத் தீட்டுவதற்குத் தமது மகளை அனுமதிக்க வேண்டுமாய் அவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். தமது உருவத்தின் வரைப்படம் தீட்டப்படுவதற்கு ஒப்புக் கொண்ட அப்துல் பஹா, தமது உருவ வரைப்படத்தை ஜூலியட் தோம்ஸன் தீட்டுவார் என அந்த வேண்டுகோளுக்கு பதிலளித்திருந்தார். மேலும், இயேசு நாதரின் திருமுகத்தை வரைப்படமாகத் தீட்ட வேண்டும் என ஜூலியட் தோம்ஸன் நெடு நாள்களாக ஆவலுற்றிருந்தார்.

தமது உருவத்தின் வபைடத்தை தீட்டுவதற்கு அப்துல்-பஹா ஜூன் மாதத்தின்போது ஜூலியட் தோம்ஸனுக்கு அனுமதி வழங்கி, “இறைவன்பாலுள்ள தமது பணிவுநிலையை” வரைப்படமாக தீட்டுமாறு கேட்டுக் கொண்டார். அந்த ஓவியத்தை ஆறு அமர்வுகளில் ஜூலியட் தோம்ஸன் தீட்டிமுத்தார். அப்பணி, வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு அறைகளில் செயல்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் 19’ஆம் தேதி அப்பணியில் தாம் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தனக்கும், லுவா கெட்ஸிங்கருக்கும் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறான ஓர் அனுபவத்தைத் தம்மால் மறக்கவியலாது என ஜூலியட் பின்னர் நினைவுகூர்ந்தார்.
அன்றைய தின்னத்தில் ஓவியத்திற்காக மாஸ்டர் அப்துல் பஹா அமர தயாராகிக் கொண்ருந்தபோது, அங்கு அப்போது இருந்த லுவா கெட்ஸிங்கர் பக்கம் அப்துல் பஹா திரும்பி, அப்வாறு உட்கார்ந்திருப்பது தமக்கு உறக்கநிலையைக் கொண்டு வருவதாகப் பாரசீக மொழியில் கூறினார். பிறகு, அவர் அமர்ந்து கொண்டு தமது கண்களை மூடிக்கொண்டார். அவரது ஓவியத்தை வரைந்த ஜூலியட் அவரை ஆழ்ந்து நோக்கிய நிலையில், தம்மால் ஓவியத்தை வரையத் தொடங்க இயலவில்லை என்பதை உணர்ந்தார். ஏனெனில், அப்துல் பஹாவின் வதனம், தெய்வீக உலகின் கௌரவத்தையும், அமைதியையும் பிரதிபலித்தது. அதன் பிறகு திடீரென்று, ஏதோ பரிசுத்த ஆவியினால் எழுப்பப்பட்டவர் போன்று அப்துல் பஹா தமது கண்களைத் திறந்து மிகவும் சக்திவாய்ந்த நிலையில் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்:
“லுவா, உன்னை நான் ஒப்பந்தத்தின் முன்னோடியாக நியமிக்கின்றேன். நானே, பஹாவுல்லாவினால் நியமிக்கப்பட்ட ஒப்பந்தமாவேன். எவரொருவரும் அவரது வார்த்தையை மறுக்கவியலாது. இதுவே பஹாவுல்லாவினுடைய சாஸனமாகும். நீங்கள் இதனை அக்டாஸ் புனித நூலில் காண்பீர்கள். புறப்பட்டுச் சென்று, “உங்களுக்கு மத்தியில் இதுவே இறைவனின் ஒப்பந்தம்,” எனப் பிரகடனம் செய்யுங்கள்.”
லுவாவை பெரும் மகிழ்ச்சி ஒன்று நிரப்பிய அதே நேரத்தில், மாஸ்டர் அப்துல் பஹாவின் வாயிலாக நிரம்பி வழிந்த ஆன்மீக சக்தியின் வழக்கத்திற்கு மாறான அத்தருணத்தைக் கண்ணுற்று ஜூலியட் கதறிப் புலம்பினார். அதன் பிறகு மாஸ்டர் அப்துல் பஹா சாந்தமடைந்தார். பரிசுத்த ஆவியானது விடுபட்டுச் சென்று அப்துல் பஹா மனித நிலைக்குத் திரும்பினார். கண்ணீருக்கிடையில் ஓவியம் தீட்டுவது இயலாத காரியம் என்பதால், ஜூலியட் தமது அழுகையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் ஜூலியட்டிடம் கூறி புன்னகைத்தார்.
அன்றைய தினத்தின் பிற்பகலில், மாஸ்டர் அப்துல் பஹா கீழ்மாடிக்கு லுவாவை அனுப்பி வைத்து அங்கு கூயிருந்தவர்களிடம் ஒப்பந்தம் பற்றி பேசச் சொன்னார். பிறடி அவர் அங்கு இறங்கி வந்தபோது, பஹாவுல்லாவினுடைய “திருக்கிளையின் நிருபம்” எனும் நூலிலிருந்து வாசித்து ஒப்பந்தத்தின் சக்தி குறித்துப் பேசினார்..
நியூயார்க் நகருக்கு “ஒப்பந்தத்தின் நகர்” எனும் பெயரையும் அப்துல் பஹா சூட்டினார்.