

17 டிசம்பர் 2021
BIC நியூயார்க் – ஈரானின் மிகப்பெரிய முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினரான பஹாய் சமூகம் உட்பட ஈரானில் சிறுபான்மையினர் மீதான பாகுபாட்டை நிறுத்துமாறு ஈரானிய அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அழைப்பு விடுத்துள்ளது. நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது செயற்குழு தீர்மானத்தை வாக்கெடுப்பு உறுதிப்படுத்துகிறது.
பொதுச் சபையின் 76-வது அமர்வில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, கனடா மற்றும் அனைத்து மண்டலங்களில் இருந்து 47 இணை அனுசரணையாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானம், ஆதரவாக 78 வாக்குகளும், எதிராக 31 வாக்குகளும் 69 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
“இஸ்லாமியக் குடியரசின் மனித உரிமைகள் உறுதிமொழிகளைக் கடைப்பிடிக்கவும், பஹாய்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் சர்வதேச சமூகம் மீண்டும் அதன் மிக உயர்ந்த மன்றத்தைப் பயன்படுத்தியுள்ளது” என ஐக்கிய நாடுகள் சபைக்கான பஹாய் அனைத்துலக சமூகத்தின் முதன்மைப் பிரதிநிதி பானி டுகால் கூறினார்.. “இந்த நிலையான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் – ஈரானிய அரசாங்கம் இந்த அழைப்பிற்கு செவிசாய்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
ஈரானின் மனித உரிமைகள் நிலை குறித்த தீர்மானங்கள் 1980-களின் முற்பகுதியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன – இது ஐ.நா.வின் மிகவும் நீடித்த மற்றும் தொந்தரவான மனித உரிமைக் கவலைகளில் ஒன்றாகும். பஹாய்கள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல், உரிய நடைமுறையை மீறி தன்னிச்சையான தடுப்புக்காவல், ஊடகங்கள் மற்றும் மத பிரசங்கத்தில் வெறுப்பைத் தூண்டுதல், வணிக உரிமங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை மறுத்தல், உயர்கல்விக்கான அணுகல் மறுப்பு மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தல் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.
சமீபத்திய சம்பவங்களில் ஒன்று, கட்டா கிராமத்தில், பஹாய்களுக்கு சொந்தமான பதின்மூன்று பாசன நிலங்கள் அவர்களின் அனுமதியின்றி பொது ஏலத்திற்கு பட்டியலிடப்பட்டதைக் கண்டது. ஈரானில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையின் போது ஏலம் வந்தது, இது பல ஆண்டுகளாக பஹாய்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரிக்க முயன்ற அதிகாரிகளால் ஒரு சாக்குப்போக்காக இருக்கலாம். ஈரானில் பஹாய்கள் துன்புறுத்தப்பட்ட பல நிகழ்வுகள் – 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் தொடர்ந்து – சமீபத்திய மாதங்களில் பதிவாகியுள்ளன. செம்னான், ரொஷான்கூ மற்றும் இவெல்-இல் பஹாய்களுக்குச் சொந்தமான நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; வெறுப்புப் பிரச்சாரக் கட்டுரைகள் அதிகரித்துள்ளன; பஹாய்களை உயர்கல்வியில் இருந்து தடை செய்யும் ஈரானின் கொள்கையை ஊக்குவிக்கும் மத தப்பெண்ணத்தின் புதிய சான்றுகள் வெளிவந்துள்ளன; மற்றும் பஹாய் சமூகத்தை அடக்குவதற்கு பாதுகாப்புச் சேவைகளால் உத்தரவிடப்பட்ட விரிவான நடவடிக்கைகள் பற்றிய அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1568/