
19 டிசம்பர் 2021
மிலான், இத்தாலி – இத்தாலி முழுவதிலுமிருந்து 55 ஊடகங்களின் பத்திரிக்கையாளர்கள், அப்துல்-பஹா நினைவாலயத்தின் குறுக்கு நெடுக்கான (Trellis) தட்டி, மத்திய பிலாஸா, மற்றும் பிரதான கட்டமைப்பின் எட்டு ஸ்தூபங்கள் ஆகியவற்றை மூடப்போகும் பளிக்கின் தயாரிப்பு குறித்து அறிந்துகொள்ள வியாழக்கிழமை மிலான் நகரில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த வடிவமைப்பு ஒரு கலை பணியாகும். இந்தக் கட்டிடம் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது அப்துல்-பஹாவின் இறுதி ஓய்விடமாகும்,” என்றார் மார்கிராஃப்-இன் தலைவரான சில்வியோ ஸோம்பேரோ. இந்த மார்கிராஃப் நிறுவணமே, உலக நீதிமன்ற கட்டிடம், அனைத்துலக பஹாய் காப்பக கட்டிடம், ஹைஃபாவிலுள்ள பஹாய் தோட்டங்களின் படித்தளங்கள், இந்தியா மற்றும் சமோவாவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லங்கள் ஆகியவற்றுக்கான பளிங்கை வெட்டி செதுக்கிய நிறுவணமாகும்.
கட்டிடக்கலைக்கும் புனிதஸ்தளங்களுக்கும் இடையிலான உறவைப் பிரதிபலிக்கும் வகையில், திரு. ஸொம்பேரோ, குறுக்கு நெடுக்கான டிரெல்லிஸ்-சும் ஒளிசாளரங்களும் எவ்வாறு ஆன்மீக உணர்வுகளைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை மேலும் விவரித்தார். “அப்துல்-பஹாவின் இறுதி இடத்திலிருந்து சன்னதிக்கு வருகை தரும் ஒவ்வொரு நபரும், வானத்தை உற்றுநோக்கி, வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தொடர்பை உணர முடியும். அது ஓர் அற்புதமாக இருக்கும்.”

பத்திரிக்கையாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மற்றவர்களில் ஹொசைன் அமனாட், உலக நீதிமன்றத்தினால் திட்டத்திற்கான கட்டிடக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹொஸேய்ன் அமானட், திட்டத்திற்கும் மார்கிராஃப்புக்கும் இடையிலான தொடர்பாளரான சோஹ்ராப் யூசுஃபியன், மற்றும் இத்தாலியின் பஹாய் தேசிய ஆன்மீகச் சபையின் இரு உறுப்பினர்கள்.
“தோட்டங்களில் உள்ள வழிகள் மற்றும் இடங்கள் உட்பட ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் தியானம் செய்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று திரு. அமானட் கூறினார்.
கல் வேலையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்தத் திட்டத்தின் தாக்கத்தை விவரித்த திரு. அமானத்: “தொழிற்சாலையின் சூழ்நிலையே வித்தியாசமாகத் தெரிகிறது. தொழிலாளர்கள் இந்த திட்டத்தைப் புனிதமான ஒன்றெனக் கருதுவதுடன் இங்கு மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பணியாற்றுகின்றனர்.
இத்திட்டத்தின் புனிதத் தன்மை பற்றி திரு. யூசுஃபியன் மேலும் பேசினார்: “ஒவ்வொரு வருகையாளருக்கும் புனிதம் என்ற கருத்தை இந்த நினைவாலயம் தூண்டுகிறது. “இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து, பஹாய் சமூகம் மார்கிராஃப்-உடன் மிகவும் சிறப்பான உறவைக் கொண்டுள்ளது. நாங்கள் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டுள்ளோம். அவர்களின் திறமையால், அவர்கள் பளிங்குக் கல்லை விண்ணியலான, புனிதத்தன்மைக்குத் தகுதியுடைய ஒன்றாக மாற்றியுள்ளனர்.

மார்கிராஃப் தொழில்நுட்ப அலுவலகத்தின் தலைவரான அலெஸ்சான்ரோ பியோட்டா, இந்த உணர்வுகளை எதிரொலித்தார்: “ஒரு காலத்தில் ஒரு சிற்பியின் பணியிடமாக இருந்த ஒன்று இன்று ஒரு கலைஞரின் பட்டறையாக மாறிவிட்டது.”
திரு. பியோட்டா, நிறுவணம் முன்பு புதிய நுட்பங்களை வகுக்க வேண்டியிருக்கும் போது, இந்தத் தற்போதைய திட்டத்தை முந்தைய திட்டங்களுடன் ஒப்பிட்டார். “சியாம்போ பள்ளத்தாக்கில், உலக நீதிமன்றத்தின் இருக்கை கட்டப்பட்ட நினைவுகள் இன்னும் வியப்பைத் தூண்டுகின்றன,” என அவர் கூறினார்.
“பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் அந்த விசேஷ காலத்தைப் பற்றி பல கதைகளைக் கொண்டுள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி புதிய தொழில்நுட்பங்கள் வகுக்கப்பட்டனவோ, அதேபோன்று இன்றும் நடக்கிறது. பளிங்கு புனையலுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் தேவைப்படுகின்றன, அவை 3D மாடல்களில் இருந்து நேரடியாக அதீத துல்லியத்துடன் கல்லை வெட்ட முடியும் – இது குவிமாடம் கொண்ட டிரெல்லிஸ்-சின் வளைந்த மேற்பரப்புகள் சார்ந்த, திட்டத்திற்கான ஒரு தேவையாகும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1569/