
தொற்றுநோய் பத்திரிக்கையியல் மீது விமர்சன பிரதிபலிப்பைத் தூண்டியுள்ளது
8 அக்டோபர் 2021
அம்மான், ஜோர்டான் – இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகெங்கும் தொற்றுநோய் பரவிக் கொண்டிருந்தபோது, செய்தி அறிக்கையில் அசாதாரணமான ஒன்று நிகழ்ந்தது–சமுதாய தன்மைமாற்றம் மற்றும் ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய ஆழமான கருத்துக்கள் உலகளவில் தலைப்புச் செய்திகளாக இருந்தன. இப்போது முனைப்பில் குறைந்திருந்தாலும், செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து இத்தகைய கதைகளை வெளியிடுகின்றன; அவற்றில் பல நெருக்கடிக்கு முன்னர் பொருத்தமற்றவை அல்லது முக்கியமற்றவை என்று கருதப்பட்டிருந்தன.
இந்த துறையில் புதிய அணுகுமுறைகள் குறித்து ஊடக வல்லுநர்களிடையே அதிகரித்த ஆர்வத்திற்கு பதிலளிக்கும் வகையில், பல நாடுகளில் உள்ள பஹாய் சமூகங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிறருடன் சமுதாய நல்லிணக்கத்திற்கு ஊடகங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் மற்றும் மனிதகுலம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆழமான உரையாடல்களை எவ்வாறு தூண்டலாம் என்பதை ஆராய்ந்து வருகின்றன.

ஜோர்டான் நாட்டு பஹாய்கள் ஊடகவியலாளர்களுடன் ஊடகங்கள் எவ்வாறு சமூகத்திற்கு நம்பிக்கைக்கான மூலாதாரமாக இருக்க முடியும் என்பது குறித்து வட்டமேசை விவாதங்களை நடத்தி வருகின்றன. “ஊடகத்தை சமுதாயத்தின் ஓர் இன்றியமையா அம்சமாக பஹாய் போதனைகள் காண்கின்றன. அவை பல்வேறு மக்களின் அனுபவ நெடுக்கத்தைப் பிரதிபலிக்கும் உலகிற்கான ஒரு கண்ணாடியின் ஆற்றலைக் கொண்டுள்ளன,” என்கிறார், அந்த நாட்டு பஹாய் சமூகத்தின் வெளிவிவகார அலுவலகத்தின் தஹானி ரூஹி.
“கடந்த சில மாதங்களில் சில நேரத்தில், உலகத்தைப் பற்றிய ஒரு முழுமையான காட்சி செய்தி அறிக்கைகளில் பிரதிபலிக்கப்பட்டது: பரபரப்பான கதைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு சமூகத்திலும் நிலவும் ஆக்கபூர்வமான செயல்முறைகளும். நம்பிக்கையைத் தூண்டும் ஊடகத்தின் சக்தி இந்த நேரத்தில் குறிப்பாகத் தெரியவருகின்றது. பெரிய மற்றும் சிறிய– நேர்மறையான முன்னேற்றங்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் மேன்மையையும் தங்களின் சொந்தத் தேவைகளைவிட சக குடிமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் திறனைக் காட்டுகிறது.”

வட்டமேசை கூட்டங்களில் பங்கேற்ற அல்-காஃட் செய்தித்தாளின் கஃடா அல்-ஷேக் கூறுகிறார்: “இந்த கலந்துரையாடல் தளங்கள் முன்னேற்றம் தொடர்பான முக்கியமான கருத்துக்களை நன்கு புரிந்துகொள்வதற்கும், எங்கள் பணிக்கான அவற்றின் தாக்கங்கள் குறித்து ஆழமாக சிந்திக்கவும் அனுமதிக்கின்றன. சமுதாய மற்றும் பொருளாதார ஒருமைப்பாடு குறித்த பிரச்சினைகள் மற்றும் ஊடகங்கள் மக்களின் முன்னுரிமைகள் உணர்வுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது பற்றி நாங்கள் ஒன்றாக கலந்தாலோசிக்கும்போது, பத்திரிகையாளர்கள் எனும் முறையில் எங்கள் நோக்கம் குறித்த எங்களின் விழிப்புணர்வு பலப்படுத்தப்படுகிறது. ”
ஜோர்டானில் வட்டமேஜை பங்கேற்பாளர்கள் வணிக நலன்களால் வடிவமைக்கப்பட்ட ஊடகத் துறையில் கட்டமைப்புக் காரணிகளின் தாக்கத்தையும் கவனித்து வருகின்றனர். “ஊடகங்களைப் பயன்படுத்துவோர் தங்களைப் போட்டியாளர்களாகப் பார்க்கக்கூடாது, மாறாக ஒத்துழைப்பாளர்களாகப் பார்க்க வேண்டும். எந்தவொரு ஊடகத்தையும் நாங்கள் தயாரிக்கும் போதும் நாங்கள் உண்மையைத் தேடுகின்றோம், ”என்று ஒரு விவாதத்தின் போது கிழக்கு மற்றும் மேற்கு உரையாடல் மற்றும் நிலையான மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் மஹ்மூத் ஹிஷ்மே கூறினார்.

உலகின் மறுபக்கத்தில், நாட்டில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமான, சமூக ஒற்றுமைக்கு எவ்வாறு உகந்திருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்திட, ஆஸ்திரேலிய பஹாய் சமூகம் ஊடகவியலாளர்களையும் மற்றவர்களையும் ஒன்றுகூட்டி வருகின்றது. அத்தகைய ஒரு முயற்சியி தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடல்களை உள்ளடக்கியிருந்தது. அதில் முதல் வரைவு மற்றும் ஊடக மாற்றத்திற்கான மையத்துடன் இணைந்து ஆஸ்திரேலிய ஊடக நிலப்பரப்பை மறுவடிவமைக்க ஊடக பயிற்சியாளர்கள் ஒன்றுதிரட்டப்பட்டனர்.
“பஹாய் கலந்தாலோசனை கோட்பாட்டை பயன்படுத்துவதன் மூலம், மாறுபட்ட அனுபவங்களை மரியாதையுடனும் ஊக்கமளிக்கும் மற்றும் ஆற்றல்மிக்க சூழலில் பரிமாறிக்கொள்ள எங்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது” என்று வெளிவிவகார அலுவலகத்தின் வீனஸ் கஃலேசி கூறுகிறார். “பெரும் நேரப்பற்றாக்குறையுடன், பலக்கியமான முடிவுகள் எடுக்கப்படும், பெரும்பாலும் வேகம் நிறைந்து ஒரு சூழலில், ஊடக பயிற்சியாளர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கு வழிகாட்டும் கொள்கைகளையும் மதிப்புகளையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி ஓய்வாக சிந்திப்பதற்கான வாய்ப்பிற்கு மதிப்புணர்வளிக்கின்றனர்.”

ஒரு கூட்டத்தில், ‘நியூஸ் ஒம்பூட்ஸ்மேன் மற்றும் ஸ்டாண்டர்ட்ஸ் எடிட்டர்களின் அமைப்பின்’ நிர்வாக இயக்குனர் எலன் சன்டர்லேண்ட் கூறுகையில், “பிளவுகளை முன்னிலைப்படுத்துவதற்கும் மேற்பட்டு ஊடகங்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றி இந்த நேரத்தில் நிறைய பேர் பேசுகிறார்கள், ஆனால், நம்மை ஒன்றுபடுத்தும் விஷயங்களைப் பற்றி பேசலாம். இது பாரம்பரியமாக அம்பலப்படுத்த பிரச்சினைகளைக் காணுகின்ற ஒரு மோதல் மாதிரியில் கட்டமைக்கப்பட்டுள்ள பத்திரிகையியலுக்கு சவாலானது. கடினமான கேள்விகளைக் கேட்பதற்கு பத்திரிகைக்கு ஒரு அடிப்படை தேவை இருப்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில் ஆக்கபூர்வமான வழிகளைக் கண்டுபிடிப்பது, ஆராய்வதற்கான மிகவும் சுவாரஸ்யமான விடயமாகும்.”
ஆஸ்திரேலியாவில் மிகச் சமீபத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தற்போதைய சுகாதார நெருக்கடி “மனிதகுலத்தின் சிறந்த நன்மைக்காக” செயல்படுவதற்கான ஊடகங்களின் பொறுப்பை முன்னெப்போதையும் விட அதிகமாகக் காட்டியுள்ளது என்று தெரிவித்தனர். யதார்த்தங்களைப் பற்றி தெரிவிப்பதில் துல்லியம் தேவைப்படுவதைப் போலவே, பங்கேற்பாளர்கள் நல்லிணக்கத்திற்கு உகந்த விழுமியங்களை வெளிப்படுத்த கதைகளின் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளனர். தொற்றுநோயின் போது சமூகத்தால் தூண்டப்பட்ட பிரதிசெயல் மற்றும் மீட்சித்திறம் பற்றிய கதைகளை அறிவிக்க நாட்டின் செய்தி நிறுவனங்களின் பெரும் முயற்சிகள் இதற்கான எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கியுள்ளன.

இதற்கிடையில், ஸ்பெய்ன் நாட்டில், பஹாய் சமூகம், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற சமூக நடிகர்களுடன் நெருக்கடிகளுக்கு விடையிறுக்கும் வகையில் பிரிவினை மற்றும் துருவமுனைப்பைக் கடக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாடல்களை நடத்தி வருகிறது.
“தொற்றுநோயின் ஆரம்பத்தில், புதிய தலைப்புகள் பொதுமக்களின் நனவுநிலைக்குள் நுழைந்தன” என்று நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் செர்ஜியோ காஃர்ஷியா கூறுகிறார். “அதிக சர்வதேச ஒத்துழைப்பின் தேவை பற்றிய விவாதங்கள்; பொருளாதார மாதிரிகள் மிகவும் நிலையான, உள்ளடக்கிய மற்றும் மீட்சித்திறம் மிக்கதாக தன்மைமாற வேண்டிய அவசியம்; மற்றும் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் பல ஆழமான கருத்துக்களின் மீது ஊடகங்கள் கவனம் செலுத்தின.
“ஊடகச் செய்திப்பரப்பின் பழைய வடிவங்கள் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் தோன்றினாலும், இந்த மாற்றம் ஊடகங்கள் எவ்வாறு மனித சிந்தனையின் தொடுவானங்களைத் திறக்க முடியும் என்பதையும், பகிரப்பட்ட உலகில் நமது பொதுவான எதிர்காலம் குறித்த ஆழமான விவாதத்தை பேணுவதையும் காட்டுகிறது. சமுதாயத்தின் பல்வேறு கூறுகளுக்கிடையிலான உறவுகளின் தொனியை அமைப்பதற்கு ஊடகங்கள் பங்களிக்கின்றன. மேலும், இது நாம் ஓருலகம் என்ற உணர்வையும் நமது பொதுவான சவால்களை எதிர்கொள்ள அவ்வாறு ஒரே மக்களாக பணியாற்ற வேண்டும் எனும் உணர்வை அது உருவாக்கிட முடியும்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1456/