

ஷா ஆலம், மலேசியா, 22 ஜனவரி 2022, (BWNS) – கடந்த மாதம் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் மூலம் பேணப்பட்ட சேவை மற்றும் கூட்டு நடவடிக்கை உணர்வு உடனடியாக நிவாரணப் பணிகளின்பால் வழிநடத்தப்பட்டது.
மலேசிய பஹாய்களின் ஆன்மிகச் சபையின் ஒரு செய்தி, அந்த நாட்டில் உள்ள பஹாய் உள்ளூர் ஆன்மீகக் சபைகளை ‘அப்துல்-பஹா’வின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்தது, “அனைத்து தேசங்கள், இனங்கள் மற்றும் நம்பிக்கைகள் மீது அவர் கொண்ட அனைத்தையும் தழுவிய அன்பை நினைவுகூர்ந்து, “இந்த நேர தேவையின் போது சக நாட்டு மக்களின்… [அவர்களின்] அவசர தேவைகளுக்கு விடையிறுத்தல் (respond).”

உணவு, உடை, துப்புரவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை சேகரிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் பஹாய் நிலையங்களை மையமாகப் பயன்படுத்தி உள்ளூர் ஆன்மீக சபைகள் செயல்பட ஆரம்பித்தன. அதே நேரத்தில் மலேசியா முழுவதிலும் உள்ள குடும்பங்கள் தங்களுடைய வீடுகளை தங்குமிடங்களாகத் திறந்தன. பல சந்தர்ப்பங்களில், முழு குடும்பங்களும், மக்கள் குழுக்களும் நீண்ட தூரம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி செய்தனர்.
முதலில் முன்னெழுந்தவர்களில் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் இருந்தனர். ஷா ஆலம் நகரில் உள்ள பஹாய் கல்வியல் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரான யாம்லா சத்தியசீலன், ஸ்ரீ மூடா அண்டைப்புறத்திற்கு அருகிலுள்ள இளைஞர்கள் குழுவின் அனுபவத்தை விவரிக்கிறார்: “வெள்ளம் வடிந்தவுடன், சுற்றியுள்ள அண்டைப்புறங்களில் உள்ள இளைஞர்கள் குழுக்கள் நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்தன.

“வெவ்வேறு அண்டைப்புறங்களில் உள்ள பல இளைஞர் குழுக்கள் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைக்க ஒன்று மற்றொண்டுடன் விரைவாக இணைந்தன. பஹாய் ஸ்பானங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த இளைஞர்களில் சிலர் வெவ்வேறு குடும்பங்களுக்கு உதவ ஸ்ரீ மூடாவிற்கு வந்தனர்.
இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுள் ஒருவர், சிலரின் சேவை செயல் இன்னும் பலரை எவ்வாறு செயலில் ஈடுபட தூண்டுகிறது என்பதை விவரிக்கிறார்: “எங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது, முதல் நாளுக்குப் பிறகு நாங்கள் மிகவும் களைப்படைந்திருந்தோம்.
“அன்றிரவு, எங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு செய்திகளை அனுப்பினோம், மேலும் தன்னார்வலர்களைத் தேடினோம். அடுத்த நாள் உதவிக்கு அதிகமான மக்கள் வந்தனர், இது சமைப்பதற்கும், உணவுகளை பேக்கிங் செய்வதற்கும், விநியோகம் செய்வதற்கும், குடும்பங்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்திட உதவுவதற்கும் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து செல்ல அனுமதித்தது.

மலேசியா முழுவதிலும் உள்ள பஹாய் சமூகங்களின் நிவாரண முயற்சிகளுக்கு கலந்தாலோசனை குறித்த ஆன்மீகக் கொள்கை மூலாதாரமாக இருந்தது.
ஷா ஆலமில் உள்ள ஓர் உள்ளூர் பஹாய் ஸ்தாபனத்தின் உறுப்பினரான மிர்ஷல் லூர்துசாமி கூறுகிறார்: “சமூக நிர்மாணிப்பு செயல்முறையிலிருந்து தோன்றிய கலந்தாலோசனைக் கலாச்சாரம், உடனடியாகத் திட்டமிடவும் செயல்படவும் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் ஒத்துழைக்கவும் எங்களுக்கு உதவியது. நிவாரண முயற்சிகளில் பலத்தை ஒருங்கிணைக்க பல்வேறு சமய சமூகங்களுடன் உரையாடல்களும் தொடங்கப்பட்டன.

மிஸ். லூர்துசாமி விளக்குகிறார், “இப்போது பலர் தங்களை ஒருவர் மற்றவருக்கு அடுத்து வாழும் ஒரு கூட்டுக் குடும்பத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள், அந்நியர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ அல்ல.”
ஷா ஆலம் உள்ளூர் சபை உறுப்பினர், லூர்துசாமி பாக்கியசாமி, சமீபத்திய முயற்சிகளைப் பற்றிப் பிரதிபலிக்கிறார்: “தனிநபர்கள், சமூகம் மற்றும் ஸ்தாபனங்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது, அவர்கள் சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் சக்தி பெருமளவில் பெருகியுள்ளதை இந்த பேரழிவு நமக்குக் காட்டுகிறது.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1578/