வழிபாட்டுக் கூட்டங்களும் அணி அணியான பிரவேசமும்
திரு சென் மேக்லின்
உலக நீதி மன்றம் தனது ரித்வான் 153-க்கான செய்தியில் பஹாய் சமூகங்கள் “கூட்டு இறை வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தும் வழக்கத்தை மேம்படுத்திடுமாறும்,” காலமுறையான பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்திடுமாறும்”, விடுத்திருந்த அறைகூவலைத் தொட்டு, அவ்வித வழிபாட்டுக் கூட்டங்களுக்கும், நமது சமூகங்களில் மாஷ்ரிக்குல்-அஸ்கார் எனப்படும் பஹாய் வழிபாட்டு ஸ்தாபனங்களைக் கட்டும் செயற்பாட்டிற்கும், அணி அணியான பிரவேசத்தை அடைந்திடுவதற்கும் இடையில் உள்ள தொடர்பைப் பற்றி நான் எனது புரிந்துகொள்ளலை இங்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.
நான்காண்டுத் திட்டத்தை எதிர்பார்த்தும், அதன் குறிக்கோள்களை மேற்கோளிடுவதுமான, ரித்வான் செய்தியின் அந்த பகுதி, “அணி அணியான பிரவேசம்,” எனும் ஒரே முக்கிய நோக்கத்தையும், சமூகத்தை உறுதிபடுத்துவது மற்றும் அதனை அடையக்கூடிய வழிகள் எனப்படும் வேறு பல உப நோக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது.
சமூக வளர்ச்சியானது, குறிப்பாக உள்ளூர்களின் நிலையில், … கூட்டு இறை வழிபாட்டுக் கூட்டங்களை உள்ளடக்கியுள்ளது. ஆகவே சமூகத்தின் ஆன்மீக வாழ்விற்கு அவசியமாக காலமுறையான வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தப்படுவது அத்தியாவசியமாகின்றது.
அப்துல் பஹாவின் பார்வையில், இவ்வித வழிபாட்டுக் கூட்டங்களே அந்த “மாஷ்ரிக்குல் அஸ்கார்” ஆகின்றன.
“இறைவனை மகிமைப் படுத்தியும் அவர்மேல் தங்கள் உள்ளங்களை மையப்படுத்தியும், ஆசீர்வதிக்கப்பட்ட அழகரது – என் ஆன்மா அவரது அன்பர்களுக்கு பிணைமீள்ச்சியாகட்டுமாக! – புனித வசனங்களை வாசித்தும் ஓதிடவும் கூடிய ஒரு கூட்டத்தை, ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்வது அன்பர்களுக்கு மிகவும் ஏற்புடைய ஒன்றாகும். எல்லா-மகிமையும் கொண்ட இராஜ்ஜியத்தின் ஒளிகள், அதிமேன்மை மிக்க தொடுவானத்தின் ஒளிக்கதிர்கள், இவ்வித பிரகாசமான கூட்டங்கள்பால் பாய்ச்சப்படும், ஏனென்றால் இவை அதி உயர்ந்த எழுதுகோலின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் ஸ்தாபிக்கப்பட வேண்டிய, அந்த இறைவனை நினைவு கூறுதலின் உதயஸ்தானங்களான மாஷ்ரிக்குல் அஸ்கார்கள், அன்றி வேறில்லை.
(அப்துல் பஹாவின் பொறுக்குவாசகங்கள், பக். 93-94).
ஒரு வழிபாட்டுக் கூட்டத்தை இந்த அர்த்தத்தில், ஒரு மாஷ்ரிக்குல் அஸ்கார் என நாம் அழைத்தோமானால், “கூட்டு இறை வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தும் வழக்கத்தை மேம்படுத்திடுமாறும்,” காலமுறையான பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்திடுமாறும்”, கோரும் அந்த ரித்வான் செய்தியின் அறைகூவலை இந்த மாஷ்ரிக்குல் அஸ்கார்களின் கட்டுமானத்தின் fஆரம்ப அறிகுறிகள் என நாம் புறிந்துகொள்ளலாம்.
அப்துல் பஹா குறிப்பிடும், ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் மாஷ்ரிக்குல் அஸ்கார்கள் கட்டப்படவேண்டும் எனும் கட்டளை கித்தாப்-இ-அக்டாஸ் நூலின் (ஆங்கிலம்) 31-வது பாராவில் வருகிறது. இதற்கு முன்னைய பாராவில் நீதி மன்றங்களை நிறுவ வேண்டும் எனும் கட்டளை காணப்படுகிறது. ஆனால், என்ன காரணத்தினாலோ, பஹாய் சமூகங்கள் ஸ்தாபனங்கள் எனும் முறையில் நீதி மன்றங்களை (ஆன்மீக சபைககளை) முதலில் தோற்றுவித்தும், பின்அதன் பங்காளி ஸ்தாபனமான இந்த மாஷ்ரிக்குல் அஸ்கார் எனும் வழிபாட்டு இல்லங்களை உடனடியாக நிர்மாணிக்காமலும் இருக்கின்றன.
இதன் காரணம் ஒரு வேளை, இந்த மாஷ்ரிக்குல் அஸ்காரை ஒரு கட்டிடமாக மட்டும் நாம் எண்ணியதன் விளைவோ என்னவோ. இந்த மாஷ்ரிக்குல் அஸ்கார் எனப்படுவது, பஹாய் புனித வாசகங்களைப் பொறுத்த மட்டில், பஹாய் சமூக அமைப்பின் ஒரு ஸ்தாபனமாக, ஒரு கட்டிடமாக மட்டும் பார்க்கப்படவில்லை, அது இறைவனை வழிபடுவதற்குறிய ஒரு ஒன்றுகூடலாகவும், நமது தனிப்பட்ட வாழ்க்கையில் மாயத் தலையாயத் தோற்றுவாயாகவும், விண்ணுலகக் கண்ணியின் சங்கேத இல்லமாகவும், இவ்வுலகில் இறைவனின் அவதாரத்தின் ஓர் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது. (அனைத்துலக அமைதிக்கான பிரகடணம், பக். 163)
சுறுக்கமாகச் சொல்லப்போனால், தன்னைப் பல ரூபங்களில் – தனிநபர், ஸ்தாபனம், சமூகம் மற்றும் லௌகீக ரீதி – என வெளிப்படுத்திக்கொள்ளக் கூடிய, ஆராதனை குறித்த ஓர் எண்ணமாகும் அது.
வழிபாட்டுக் கூட்டங்களை மேம்படுத்துமாறு இப்போது நாம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாவது, ரித்வான் செய்தி முழுவதையும் வியாபித்துள்ள அணி அணியான பிரவேசம் எனும் மூல விஷயத்துடன் அது கொண்டுள்ள நேரடியான தொடர்பையே குறிக்கின்றது.
நீதி மன்றம் மற்றும் வழிபாட்டு ஆலயம் — உள்ளூர் ஆன்மீக சபை மற்றும் மாஷ்ரிக்குல் அஸ்கார் — இரண்டும் தங்கள் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தவும் தங்கள் நிர்வாகம் சம்பந்தமான விஷயங்களை வழிநடத்தவும் முறைபடுத்தவும் இறையருளால் விதிக்கப்பட்ட இரு முதல் கட்ட ஸ்தாபனங்கள் என பாதுகாவலரால் அழைக்கப்படுகின்றன. (அமெரிக்காவுக்கான செய்திகள், பக். 24)
இது, பஹாய் நிர்வாக முறையின் தேர்வு செய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அந்த இரு கரங்களுக்கிடையில் உள்ள உறவைப் போன்று, ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட இரு மையஸ்தாபனங்களைக் கொண்டவை நமது உள்ளூர் பஹாய் சமூகங்கள் என்பது போல் ஓர் எண்ணத்தை உருவாக்குகின்றது.
உலக நீதி மன்றம் தனது அக்டோபர் 20, 1999 என திகதியிடப்பட்ட, சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு தொட்ட செய்தியில், மாஷ்ரிக்குல் அஸ்காரே “ஒவ்வொரு பஹாய் சமூகத்திற்கும் ஆன்மீக மையமாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளனர். (ஒரு பரந்த தொடுவானம், பக் 139)
இந்த “ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும்” ஒரு பஹாய் ஆலயத்தை கட்டுவது தொடர்பிலான காரியத்தில் இறங்கும் செயலாகப்பட்டது நமது பஹாய் சமூக அமைப்பு முறையில் ஒரு குறிப்பிடத் தக்க மாற்றத்தையும், ஒரு பஹாய் என்பதன் அர்த்தத்தை குறிப்பிடுமளவிற்கு மறு சிந்தனை செய்யவேண்டியதையும் இது குறிப்பதாகவே தோன்றுகிறது.
ஆகவே, ஓர் ஆன்மீகப் பொருள் மற்றும் ஸ்தாபனம் எனும் முறையில், மாஷ்ரிக்குல் அஸ்கார் குறித்து, நான்காண்டுத் திட்டத்தின் தொடக்கத்திலேயே, உள்ளூர் ஆன்மீக சபையுடனும் சமூகத்தின் பிற அங்கங்களுடனும் அதற்கு உள்ள தொடர்பையும் குறித்து மேலும் தெளிவான அறிவு பெறுவது, உள்ளூர் மற்றும் தேசிய சமூகங்கள் நான்காண்டுத் திட்டத்தின் இந்த அம்சம் வெற்றிபெற திண்ணமான திட்டங்களை உருவாக்கி அவற்றை உடனடியாக நிறைவேற்றவும் உதவும்.
இரண்டாயிரத்தாவது ஆண்டை அடைந்தும் “இறைவனை கூட்டாக வழிபடும் செயல்” குறித்தும் “அணி அணியான போதனை எந்த அர்த்தத்தில் ஒரு செயல்படுத்தத் தக்க விஷயமாக நமது சமூகங்களுக்கு இருக்கப்போகின்றது என்பதை குறித்தும் யோசித்துக் கொண்டிருந்தோமானால் அது பெரும் பரிதாபமாகவே இருக்கும்.
பஹாய் சமூகங்கள் இதை கற்க வேண்டிய ஒரு விஷயமாக செய்து கொண்டு, அக் கல்வியின் முடிவினில் விளைந்திடும் விஷயங்களை, தமது சமூகங்களின் நடுமையத்தில் மாஷ்ரிக்குல் அஸ்கார் ஒன்றை நிர்மாணிக்கும் செயலுக்கான திண்ணமான திட்டங்களை உருவாக்குவதில் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது ஆலோசனையாகும்.
இக் கண்டுகொள்ளல் குறித்த செயற்பாடு செல்லக் கூடிய திசையை யூகிக்க முயல்வது அறிவுடமையாகாது, ஏனென்றால் அதிகமான விஷயங்கள், என்னதான் நடக்கும் என்பதைக் காணும் ஆர்வத்தில் உலக நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதன் மூலம் நமது செயலாக்கங்களிலிருந்து பிறக்கும் அனுபவங்களின் மூலமாகவே அறிந்துகொள்ளப்படவேண்டும். அந்த மாஷ்ரிக்குல் அஸ்காரை நிர்மாணிக்கும் பணியை நாம் எங்கு எப்படி ஆரம்பிப்பது என்பதை குறிக்கும் அப்துல் பஹாவின் வாசகங்களிலிருந்து மேலும் ஒரு பகுதியை நான் மேற்கோளிட விரும்புகிறேன்:
“மெய்யாகவே, பிரகாசமான, தூய்மையான இதயங்களே அந்த மாஷ்ரிக்குல் அஸ்கார் ஆகும், அவற்றிலிருந்து பிறக்கும், மன்றாடும் மற்றும் பிரார்த்திக்கும் குரலொலி அருட் திருக்கூட்டத்தினரை தொடர்ந்தாற்போல் சென்றடைந்து கொண்டிருக்கின்றது.”
உங்கள் ஒவ்வொருவரின் இதயங்களையும் அந்த தெய்வீகக் கோவிலின் ஒரு கோவிலாகச் செய்யும்படியும், அதிபெரும் விளக்கின் வழிகாட்டுதல் ஆங்கு ஏற்றப்பெறவும், இறைவனை நான் வேண்டுகின்றேன். இதயங்கள் இத்தகைய நிலையை அடைந்திடக் காணும் போது, மாஷ்ரிக்குல் அஸ்காரை எழுப்புவதில் மிகத் தீவிரத்துடன் அவர்கள் செயல்படுவார்கள். இவ்வாறாகவே வெளிப்படையானது உட்படையானதை வெளிப்படுத்தட்டுமாக, உருவாக உள்ளது அதன் உள்ளர்த்தத்தை குறிக்கட்டுமாக” (அப்துல் பஹா அப்பாஸின் நிருபங்கள், பக். 678)
இது உலக நீதி மன்றம் ஏற்கணவே மூன்றாண்டுத் திட்டத்தில், தனிநபர் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வது எனும் பொருளின் கீழ் விடுத்திருந்த அறைகூவலை ஒட்டி, ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய முதல் அடியை குறிக்கின்றது.
இது மேலும் குறிப்பது என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் நமது உள்ளங்களை ஒரு மாஷ்ரிக்குல் அஸ்காராக காணவேண்டும் எனவும், அங்கு ஒவ்வொரு காலையிலும், மதியத்திலும், மாலையிலும், இரவினிலும் இறைவனை நினைவு கூறும் காரியத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டும் எனவும் — இந்த அர்த்தத்தில் உட்படையில் மெய்ப்பொருளான அந்த ஒன்று மாஷ்ரிக்குல் அஸ்கார் ஆகும் பட்சத்தில், அது முடிவில் ஏதோ ஒரு கட்டிடமாக உருவெடுக்கும் வரை பல நிலைகளிலான பக்திக் கூட்டங்கள் நடத்துவதன் வாயிலாக, மாஷ்ரிக்குல் அஸ்காரை ஓர் அமைப்பாக ஸ்தாபித்து, அதன்மூலம் ஷோகி எஃபெண்டி அவர்கள் கண்ட காட்சியைப் போல் அதைச் செயலாக்கம் மிக்கதொரு நிறுவனமாக்கி, மனிதகுலத்திற்குச் சேவையை வழிபாட்டுடன் ஐக்கியப்படுத்திடவும் வேண்டும். (பஹாய் நிர்வாக முறை பக். 185)
மாஷ்ரிக்குல் அஸ்காரை ஒரு குறிப்பான கருப்பொருளாகக் கொள்வதும், பஹாய் சமூக வாழ்வில் அதன் நிலையை ஆராய்வதும், சமூகம் தற்போது அடைந்துள்ள நிலையிலிருந்து தொடர்ந்து மேலும் மேம்பாடடையவும் இது ஊட்டம் அளித்தும் அணி அணியான பிரவேசத்தை அடைந்திட மேலும் ஒரு வழியையும் இது திறந்துவிடும்.
மாஷ்ரிக்குல் அஸ்காரை பற்றி அழகாக கூறியுள்ளார். மொழியாக்கத்திற்கு மிக்க நன்றி அங்கள். தொடர்க உங்கள் இந்த பணி.